கயத்தாறில் பா.ஜனதா விவசாய அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார்.
கூட்டம் நடந்தபோது எடுத்த படம்
கூட்டம் நடந்தபோது எடுத்த படம்
Published on

கயத்தாறு:

கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார். கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன், மாநிலதிட்டப்பொறுப்பாளர் ராம் ஆச்சாரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முனியசாமி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி, விவசாய அணி ஒன்றிய தலைவர் அரிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி கனகராஜ், பொதுச் செயலாளர்கள் பெருமாள்சாமி, வீரையாபாண்டி, ஒன்றிய பொருளாளர்கள் கதிர்வேல், மகேஷ் மற்றும் கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com