75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் தியாகிகளுக்கு மரியாதை

விழாவானது 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது. வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் இடம் பெற்றது.
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் தியாகிகளுக்கு மரியாதை
Published on

வடவள்ளி

பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழா ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் ஒரு பகுதியாக சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் பொருட்டு, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தன்னார்வலர்களுக்கு, வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் மற்றும் பி. எஸ். குமாரசாமி ராசா பற்றிய சுவரொட்டி விளக்க காட்சியும் இடம் பெற்றது. அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ், வேலூர் சிப்பாய் கழகத்தில் பங்காற்றிய வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் முருகவேல், ரூபா குணசீலன், ஆட்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மணிமேகலை, வசந்த், ஆசிரியர் சங்க தலைவர் மஞ்சு புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர்.

சுவரொட்டி விளக்க காட்சியில் பாரதியார் பல்கலைக்கழக தன்னார்வலர்கள் நாகராஜ், பவதாரணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். எம்.ஜி.ஆர் கல்லூரி அருண் பிரகாஷ், யாழினி ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். பி.எஸ். ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி தன்னார்வலர்கள் சுருதி, ஜானகி ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அண்ணாதுரை செய்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com