மச்சபுரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

முதல் கால யாகபூஜை, வேத பாராயணம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.விமான பாலாலயம் செய்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கடம் புறப்பாடு நடந்தது.
கடம் புறப்பாடு நடந்தது.
Published on

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது. முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகபூஜை, வேத பாராயணம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

2-வது நாள் கோ பூஜை, 2-ம் கால யாக பூஜை அதனை தொடர்ந்து விமான பாலாலயம், சுவாமிக்கு மகா தீபராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள் ஹாசினி, சிவசங்கரி, ஆய்வாளர் லட்சுமி, கங்காதர சிவாச்சாரியார், கோவில் மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கிராமவாசிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com