பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் இறகு பந்து போட்டி

இளைஞர்க ளுக்கான இறகு பந்து போட்டி இரவில் மின்னொழியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கிறிஸ்தவர்கள் சார்பில், நடைபெற்ற இறகு பந்து போட்டியை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.
பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கிறிஸ்தவர்கள் சார்பில், நடைபெற்ற இறகு பந்து போட்டியை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.
Published on

 பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் கிறிஸ்தவர்கள் சார்பில், புனித அந்தோணியார் ஆலயம் அருகே இளைஞர்க ளுக்கான இறகு பந்து போட்டி இரவில் மின்னொழியில் நடைபெற்றது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.7000, இரண்டாவது பரிசு ரூ.5000, மூன்றாவது பரிசு ரூ.3000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர செயலாளர் கௌதமன் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com