பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ- மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ- மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவியர்க ளுக்கான கல்வி உதவித் தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது. அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com