பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஆண் உடல் மிதந்து செல்வதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், தேவனம்பாளையம் அரசு விதைப்பண்ணை அருகே செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்து செல்வதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த உடலை மீட்டனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் பனியன் மற்றும் டிராயர் அணிந்த நிலையில் கிடந்தார். மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com