திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
ஆனந்த விநாயகர் கோவிலில்  அகில பாரத  அய்யப்பா சேவா சங்க  ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில்  மாலை அணிந்த பக்தர்கள்.   
ஆனந்த விநாயகர் கோவிலில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில் மாலை அணிந்த பக்தர்கள்.   
Published on

திருச்செந்தூர்:

கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் திருச்செந்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று காலையில் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் வைத்து திருச்செந்தூர் அய்யப்பா சேவா சங்க குருசாமி சந்தானம் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதே போல் அகில பாரத அய்யப்பா சேவா சங்க திருச்செந்தூர் ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com