அரசு கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

இளம் வயது திருமணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம். கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளின் புள்ளிவிவரங்களை தெரிவித்தனர்.
கருத்தரங்கில் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பேசினார்.
கருத்தரங்கில் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பேசினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், தஞ்சாவூர் இணைந்து "இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு" கருத்தரங்கம் நடத்தியது.

இந்நிகழ்வுக்குக் கல்லூரி முதல்வர்ஜான்பீட்டர் தலைமை தாங்கினார்.மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக, மருத்துவர் ராஜராஜேஸ்வரி, மகப்பேறுத்து றைத்தலை வர், மருத்துவர் உதயா அருணா, மகப்பேறு இணைப்பேராசிரியர்,பிலாமினோ சாந்தினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரபா, ஒருங்கிணைந்த சேவை மையம் குழந்தை வளர்ச்சி அலுவலர்,கோடீஸ்வரன் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் போன்றோர் கலந்து கொண்டு இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்தும் சிக்கலையும், அதனால் வரும் கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவு களையும், பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டி யதையும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வினை, முனைவர்கண்ணம்மாள் ஒருங்கிணைத்தார். முடிவில் வீரமணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com