ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் இவாஸ் நலச்சங்கம், கும்பகோணம் ரத்ததான டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தெப்பக்குளத்தில் முடிவடைந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட்டு, இவாஸ் நல சங்க நிர்வாகக்குழு அப்துல் மாலிக் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com