துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

பேரணியை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தொடங்கி வைத்தார். முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது.
மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.

பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது. அப்போது சுகாதாரத்தை பேணி காப்போம், தூய்மையான ஊராட்சிகளை பாதுகாப்போம். சுத்தமான குடிநீர், குப்பை இல்லா ஊராட்சி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சேவைகளை துரிதமாக செயல்ப டுத்துவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளி பாபு, மாநிலத் துணைச் செயலாளர் கொக்கூர் வீரமணி துணைத் தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்திரா, ராஜசேகர், கலியபெருமாள், செல்வராஜ் , மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com