தூத்துக்குடியில் ஆட்டோ கண்ணாடி உடைப்பு- தட்டிக்கேட்ட தந்தை- மகன் மீது தாக்குதல்

மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஆட்டோ கண்ணாடி உடைப்பு- தட்டிக்கேட்ட தந்தை- மகன் மீது தாக்குதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மலைராஜ். ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆட்டோவில் அமர்ந்து பேசி உள்ளனர். இதனை அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது ஆட்டோ கண்ணாடி உடைக்க ப்பட்டிருந்தது. இதுகுறித்து மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த 3 பேரும் போஸ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி உள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற போஸின் மற்றொரு மகன் குமாரையும் அடித்து தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிஷோர் டேனியல் என்பவரை கைது செய்தனர். மேலும் காளிராஜ், சங்கர் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com