கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஜெயக்குமார்-நித்தியா இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமார் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 31). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இதேபோல் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமார் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நித்தியா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாதால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நித்தியா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.

இதனையடுத்து கயத்தாறு போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணி தீலீப் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com