பீர்பாட்டிலால் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

கிருஷ்ணவேணி, சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது. காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பீர்பாட்டிலால் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த புதுக்கடையை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 73). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சுரேஷ் உட்பட 4 பேர் திடீரென்று மூதாட்டி கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் பீர் பாட்டிலால் கிருஷ்ணவேணியை தாக்கி அவரது வீட்டில் இருந்த டி.வி. பெட்டியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் சுரேஷ், நர்மதா, கிருஷ்ணமூர்த்தி, உத்திராம்பாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com