திருக்குறுங்குடி அருகே தொழிலாளி மீது தாக்குதல்

திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது40). கூலி தொழிலாளி. சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருக்குறுங்குடி அருகே தொழிலாளி மீது தாக்குதல்
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது40). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள குத்துபிறை அம்மன் கோவில் கொடை விழா பார்ப்பதற்காக ராஜபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவர், எனக்கு வேண்டாத முத்துகிருஷ்ணனிடம் நீ ஏன் பேசுகிறாய் என்று ராமரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ராமரை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com