களக்காடு அருகே பெண் மீது தாக்குதல்

சாலமனுக்கும், பால்ராஜிக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. பால்ராஜிடம், மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து கிருஷ்ணகுமாரி தட்டி கேட்டார்.
களக்காடு அருகே பெண் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் சாலமன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ்க்கும் (44) இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இட்த்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சாலமன், அவரது மனைவி கிருஷ்ணகுமாரியிடம் (40) கூறி உள்ளார்.

சம்பவத்தன்று கிருஷ்ணகுமாரி வீட்டின் பின்புறம் பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பால்ராஜிடம், கிருஷ்ணகுமாரி மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பால்ராஜ், கிருஷ்ணகுமாரியை தாக்கினார். இதில் காயமடைந்த கிருஷ்ண குமாரி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பால்ராஜை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com