கோவையில் வாலிபர் மீது தாக்குதல்

அருண் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
கோவையில் வாலிபர் மீது தாக்குதல்
Published on

கோவை,

கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவைப்புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கடைக்கு புரோட்டா வாங்குவதற்காக சென்றார். ஓட்டல் உரிமையாளரிடம் 8 புரோட்டா கேட்டார். பின்னர் வீட்டிக்கு சென்று திறந்து பார்த்த போது புரோட்டா குறைவாக இருந்தது. இதனையடுத்து அருண் ஓட்டலுக்கு சென்று உரிமையாளரிடம் இது குறித்து கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளார் சத்திரக் (22) மற்றும் அவரது நண்பர் ராஜா சந்திரன் (32) ஆகியோர் சேர்ந்து இரும்பு நாற்காலியால் அருணை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com