நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார்.ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார்.
நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது39). இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வயல் செண்பகராமநல்லூரில் உள்ளது.

அதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக பயிர் செய்யவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி தனது வயலுக்கு சென்ற போது, பக்கத்து வயலுக்கு சொந்தகாரரான காக்கைகுளத்தை சேர்ந்த சிவா என்பவர், கந்தசாமி வயலில் வேலி கற்களை பிடுங்கி எறிந்து விட்டு, உள்ளே புகுந்து, பனங்கிழங்கை நடவு செய்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த கந்தசாமி தட்டிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com