நாங்குநேரி அருகே ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரி அருகே ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோட்டக்குடி நடுத்தெருவில் சென்ற போது, அங்கு அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவர் கையில் கம்பை எடுத்து வைத்துக் கொண்டு, போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த செல்லசாமி, அவரிடம் தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், செல்ல சாமியை கம்பால் குத்தினார்.மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த செல்ல சாமியை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப் பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com