அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.
அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.

கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.

பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com