களக்காடு அருகே பெண்கள் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை சேர்ந்தவர்கள் ராமலிங்கம் - கிறிஸ்டோபர் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மஞ்சுவிளையில் உள்ள கலையரங்கம் அருகே வந்த போது 5 பேர் சேர்ந்து ராமலிங்கத்தை வழிமறித்து கம்பால் தாக்கினர்.
களக்காடு அருகே பெண்கள் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது20). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கத்தின் உறவினர் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சுவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் விபத்தை ஏற்படுத்துவது போல் வந்தார்.

இதையடுத்து ஆறுமுகம் அவரிடம் தட்டி கேட்டார். இதனால் அவர் ஆறுமுகத்தை அவதூறாக பேசினார். இதுபற்றி ஆறுமுகம், ராமலிங்கத்திடம் கூறினார், இதனைதொடர்ந்து ராமலிங்கம், கிறிஸ்டோபரிடம் போனில் தொடர்பு கேட்டு ஆறுமுகத்தை அவதூறாக பேசியது பற்றி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராமலிங்கம் மஞ்சுவிளையில் உள்ள கலையரங்கம் அருகே வந்த போது, கிறிஸ்டோபர், மஞ்சுவிளையை சேர்ந்த தனுஷ், தினேஷ், பீட்டர், விக்னேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து ராமலிங்கத்தை வழிமறித்து கம்பால் தாக்கினர்.

இதனை தடுக்க வந்த அவரது உறவினர்கள் கோபாலகிருஷ்ணன் மகன் பென்சிராஜா, மனைவி ரோஸ்லின் ஆகியோரையும் தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த ராமலிங்கம், பென்சிராஜா, ரோஸ்லின் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிறிஸ்டோபர் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com