ஆத்தூர் அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சங்க விழா

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்களின் சங்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய மாணவர்கள் சங்க விழா நடந்த போது எடுத்த படம்.
பழைய மாணவர்கள் சங்க விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்களின் சங்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அன்னலெட்சுமி, பேரூராட்சி தலைவர் கமால்தீன். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவி மகேஸ்வரி முருகப்பெருமாள் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சந்தானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் ஆசிரியை திருமலை, முன்னாள் ஆசிரியர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கூட்டதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாகக்குழு தலைவராக ஞானதுரை செயலாளராக புஹாரி, பொருளாளராக குப்புசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரி ராம்குமார், ராஜலட்சுமி, முருகன், கேசவன், கமல் செல்வி, முன்னாள் மாணவர்கள் ரெம்சியஸ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், மதிமாறன், ஜமால், ஆசிரியர் முருகன் உட்பட ஏராளமான முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com