லாரி டிரைவரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த 700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.
லாரி டிரைவரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறிப்பு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி காசி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). லாரி டிரைவரான இவர் நேற்று அம்மாபேட்டை ஜங்சன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த .700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சேலம் எருமாபாளையம் நேதாஜி தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (20), கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்த நடராஜ் (20) மற்றும் மதன் குமார் (வயது 18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com