

தருமபுரி,
தருமபுரி ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட் டவுன் சங்கம், தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து உலக தாய்ப்பால் வார விழாவை தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் நடத்தினர்.
இந்த விழாவிற்கு ரோட்டரி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மிட் டவுன் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் புனிதா சிறப்புரையாற்றினார். மாணவிகள் அஸ்வினி, அபிநயா, சுகவர்ஷினி ஆகியோர் உரை நிகழ்த்தினர். விழா முடிவில் ஆசிரியர் ஜலஜா ரமணி நன்றி கூறினார்.