பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி துன்புறுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

இந்துமதி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.இளங்கோ சசிகலாவிடம் கர்ப்பத்தை கலைக்க சொல்லி துன்புறுத்தினார்.
பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி  துன்புறுத்திய கணவர் உட்பட  3 பேர் மீது வழக்கு பதிவு
Published on

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் இந்துமதி (வயது 32) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்துமதி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இளங்கோ சசிகலாவிடம் கர்ப்பத்தை கலைக்க சொல்லி துன்புறுத்தியதாகவும் அதற்கு உடந்தையாக அவரது உறவினர்கள் திருநாவுக்கரசு, குணா, ஆகியோர் இருந்ததாகவும் சசிகலா அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமி இளங்கோ திருநாவுக்கரசு குணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com