ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.
கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு பென்சிகர் தலைமை தாங்கினார். ஆலந்தலை துணை பங்கு தந்தை பாலன் முன்னிலை வகித்தார்.

வியாகப்பர் ஆலய பங்குதந்தை லெனின் டிரோஸ் மறையுரை ஆற்றினார். மடத்து விளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து அசனம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com