தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 600 டன் உரம் வருகை

குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 600 டன் உரம் வருகை
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 10 வேகன்களில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது.

பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

X

Maalai Malar
www.maalaimalar.com