போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு

அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.
பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.

பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com