ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: மேலும் 23 போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு

23 கூடுதல் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு.தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் சூப்பிரண்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: மேலும் 23 போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு
Published on

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மரணம் எதிரொலியாக புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் துணை கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய முத்துக்குமார் பதவி உயர்வு பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை சைபர்கிரைம் துணை கமிஷனராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர 23 கூடுதல் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு பெற்று சூப்பிரண்டாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய குத்தாலிங்கம் தி.நகர் துணை கமிஷனராகியுள்ளார். நெல்லையில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய கார்த்திகேயன் தாம்பரம் பள்ளிக்கரணை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்பில் பணியாற்றிய தேவநாதன் பதவி உயர்வு பெற்று சென்னை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கு பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பட்டாலியன் சூப்பிரண்டாகியுள்ளார்.

இதே போன்று தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் சூப்பிரண்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com