பாளையை சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

உமா மகேஸ்வரி ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
பாளையை சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை:

பாளை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாளை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

பெண் காவலர்

இவரது மனைவி உமா மகேஸ்வரி.ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.கடந்த ஒரு வருடமாக உமா மகேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

தற்கொலை

இந்நிலையில் இன்று காலை உமாமகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com