சென்னையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
காவல்துறை அதிகாரிகள்,   சரவணகுமார்
காவல்துறை அதிகாரிகள், சரவணகுமார்
Published on

சென்னை:


சிவகங்கை மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (30). தமிழக ஆயுதப்படை காவலராக கடந்த 2013ம்  முதல் பணியாற்றி வந்தார்.

சரவணகுமாருக்கும், ஸ்வேதா என்ற பெண்ணுக்கம் 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.  தற்போது ஆவடியில் உள்ள பூபொழில் நகரில் இவர் வசித்து வந்துள்ளார். 

அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.  மாலை 4 மணி அளவில் திடீரென சரவணகுமார் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

சரவணக்குமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com