குறுவட்ட அளவிலான கோகோ போட்டிகள்

ஜெயங்கொண்டத்தில் குறுவட்ட அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றதுகுறுவட்ட அளவில் 250 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
குறுவட்ட அளவிலான கோகோ போட்டிகள்
Published on

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான த. கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 14 ,17 ,19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோகோ போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்புமணி வரவேற்றார். போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். த.கீழவெளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் அமைப்பு, கிராம நிர்வாக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர், தன்னார்வலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக நல்லமுத்து, மயில்சாமி, இளவரசன், குமார், மோகன், விஜய்ஆனந்த், ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் பணியாற்றினர். போட்டியில் சுமார் 250 மாணவர்கள் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து கலந்து கொண்டனர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் குறுவட்ட இணை செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com