ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாகவும், அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காதல் ஜோடி உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com