அரியலூரில் புத்தாக்கப் பயிற்சி

அரியலூர் மாவட்ட மைய நுலகத்தில் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றதுதிருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் பேசினார்
அரியலூரில் புத்தாக்கப் பயிற்சி
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் , போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுப் பெற்ற முதுகலை உயிரியல் ஆசிரியை மா.தமிழரசி, சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, வாசகர் வட்டத் தலைவர் கு.மங்கையர்கரசி, மாவட்ட நுலக அலுவலர் ரா.ஆண்டாள், முதன்மை நூலகர் ஜான்பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com