மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை
Published on

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் தனவேல். இவரது மகன் பிரசாத் (வயது35). இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை இவரது மனைவி திலகவதியும், தந்தை தனவேலும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரசாத் கேனில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பிரசாத் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com