அரியலூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

மதுபான கடத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்
அரியலூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
Published on

அரியலூர், 

உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (42). கடந்த 22 ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட கூடும், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com