சங்கரன்கோவிலில் ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க.வினர் வரவேற்பு

தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் வீரவாள் வழங்கிய காட்சி.
வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் வீரவாள் வழங்கிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரம குரு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச் செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் செண்பகவிநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செய லாளர்கள் லாலாசங்கர பாண்டியன், பொன்.முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டி யன், சேர்மதுரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன்,

மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் குரு, ருபி பாலசுப்ரமணியம், மாரி முத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகேஷ் உதயகுமார், வக்கீல் பிச்சையா, கே.எஸ்.எஸ். மாரியப்பன், கிப்ட்சன், சிவசங்கரி, அப்பாஸ் அலி, விஜயா சவுந்தரபாண்டியன், மாடசாமி, பிரேம்குமார்,

பசுபதி பாண்டியன், நாகூர்கனி, மணிகண்டன், சரவணன், சேதுராமன், அமிதாப், சாமுவேல், அழகு துரை மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் கார்த்திக், சரவணன் அன்சாரி, ராஜ், மணிகண்டன் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com