துக்கியாம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.
துக்கியாம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 9-ம் வகுப்பு மாணவிகள் தீபிகா, ஜீவிதா ஆகியோர் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி, பல்வேறு தனித்திறன் மற்றும் அறிவியல் படைப்புத்திறன் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்ற, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, தலைமை யாசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் ஞானசேகரன், ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசுமை அறக்கட்டளை தன்னார்வலர்கள் அப்பு அப்துல்நயீம், சிங்கிபுரம் ராஜா, உதயா பழனிசாமி, குருஜி பாஸ்கர், ராஜ் திலக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். இதனை யடுத்து, பள்ளி வளாகத்தில் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் ஆசிரியர் உதயசூரியன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com