அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- அதிகாரி தகவல்

விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- அதிகாரி தகவல்
Published on

கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான காஞ்சிபுரத்தில் செயல்படும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர புதிய பாடத்தின்படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே 30:11.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com