ஆண்டிபட்டி: வேன் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி விலக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 29). இவர் தனது நண்பர்களான சின்னமனூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (26), அதே பகுதியைச் சேர்ந்த மகரந்தன் (32) ஆகியோருடன் ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, அருகில் வந்த காரை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜாங்கம், ராஜேஷ் மகரந்தன் மற்றும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த விஜய் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com