என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பட்டதாரிகள் எழுதிய செயல் அலுவலர், உதவி இயக்குநர் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பு
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ 8 உதவி இயக்குனர் பதவிகளை நிரப்ப தேதி அறிவிப்பு வெளியிட்டது.
- தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ பிரிவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 25 செயல் அலுவலர் நிலை-1 பதவிகள், கூட்டுறவு தணிக்கை துறையில் 8 உதவி இயக்குனர் பதவிகள் நிரப்ப கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
பின்னர் செயல் அலுவலர் பணிக்கு தாள்-1, தாள்-2, தாள்-3 ேதர்வும், கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு தாள்-1, தாள்-2 தேர்வும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன.
இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் ஏராள–மானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த 2 தேர்வுகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.