அன்னதானப்பட்டியில் இளம்பெண் மாயம்

துர்கா ( வயது 23). பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
அன்னதானப்பட்டியில் இளம்பெண் மாயம்
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்–பட்டி சுவர்ணாம்பிகை செட் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் துர்கா ( வயது 23). பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23- ந் தேதி பிற்பகல் 2 மணி அளவில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான துர்காவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com