கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான சிறப்பு பூஜை

அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் ஞாயிறு அன்னதான சிறப்பு பூஜை நடைபெற்றது.பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தார்.
சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் ஞாயிறு அன்னதான சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு மேல் அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம், வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு, சோடனை தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், பாலு, முருகன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, உமா மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com