

தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம் நடந்தது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை அதிபர்கள், நெல் அரிசி வியாபாரிகள் மற்றும் தவிடு வியாபாரிகள் செய்திருந்தனர்.