கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை

கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சித்திரை முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்.
பூமாதேவி ஆலயத்தில் பூஜை நடந்தபோது எடுத்த படம்
பூமாதேவி ஆலயத்தில் பூஜை நடந்தபோது எடுத்த படம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சித்திரை முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்.

இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, துவாரகாநாதன், மாரிஸ்வரன், கதிர் காம சுப்பிரமணியன் ,விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, முத்துலட்சுமி, மாரியம்மாள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com