என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம்
    X

    அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவக்க விழாவில் ஊட்டச்சத்து ஊழியர்கள் காட்சி படுத்திய சிறுதானியம் உணவுகளை வருவாய் கோட்டாச்சியர் விஷ்ணுவர்தினி பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    ஏற்காடு மலை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம்

    • சேலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்தினி நலதிட்டங்கள் வழங்கினார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரமங்கலம் கிராம ஊராட்சியில் சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து துறைகளின் மூலம் மாரமங்கலம் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் எஸ்.டி. சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்த 10 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி சாதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றார். மேலும் முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறி வகைப்பாடு மற்றும் தானியங்களில் உள்ள சத்துக்கள் விளக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சி வைத்திருந்தனர்.

    அதை ஆஎ.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள் மற்றும் காய்கறிகளின் பயன்கள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

    இந்த முகாமில் மாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×