பிளஸ்-1 மாணவி கர்ப்பம் கைதான ஆந்திர மாநில தேக்வாண்டோ பயிற்சியாளர் ஜெயிலில் அடைப்பு

நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
லல் கோத் லட்சுமணன்
லல் கோத் லட்சுமணன்
Published on

நாமக்கல்:

நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள பிரபல பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்க நாமக்கல் வந்திருந்தார். அதே போட்டியில் பங்கேற்க மாணவர் ஒருவரை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பயிற்சியாளர் லல் கோத் லட்சுமணன் (வயது 24) என்பவர் அழைத்து வந்திருந்தார்.

இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்த பெற்றோர், நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் தெலுங்கானா மாநிலம் சென்று அங்கு உள்ள நல்கெண்டா மாவட்டம் எல்லாபுரம் கிராமத்தில் இருந்த பயிற்சியாளர் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் நாமக்கல் அழைத்து வந்த அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com