திண்டிவனம் அருகே கார் மோதி ஆந்திர பக்தர் பலி

விஜயவாடா பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவிலுக்கு வந்தனர்.வாகனத்தில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றார்.
திண்டிவனம் அருகே கார் மோதி ஆந்திர பக்தர் பலி
Published on

விழுப்புரம்:

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவிலுக்கு சென்று விட்டு 15-க்கும் மேற்பட்டோர் தனியார் சொகுசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி அருகே தனியார் உணவ கத்தில் உணவருந்த வாக னத்தை நிறுத்திய போது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த குல்லாபுடி சீதா ராமன் (வயது 46), உண வருந்து வதற்க்காக வாக னத்தில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முற்பட்ட போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக வந்த அடை யாளம் தெரியாத கார் குல்லா புடி சீதாராமன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

ரோஷனை போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற காரைதேடி வருகின்றனர். குள்ளாபுடி சீதாராமன் மனைவி மற்றும் உறவி னர்கள் கண் எதிரே கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com