170 கி.மீ. பாதயாத்திரையை நிறைவு செய்த ஆனந்த் அம்பானி

துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
170 கி.மீ. பாதயாத்திரையை நிறைவு செய்த ஆனந்த் அம்பானி
Published on

ஆதமாபாத்:

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா கோவிலுக்கு 170 கிலோ மீட்டர் நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பலத்த பாதுகாப்புடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இரவில் தான் அவர் அதிகமாக நடந்தார்.

ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்த நாளுக்கு முன்பு பாதயாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி தனது 170 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

அதிகாலை அவர் ஸ்ரீ துவாரகா தீவு கோவிலை வந்து அடைந்தார். அவரது கடைசி நாள் யாத்திரையில் தாயார் நீட்டா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சனா ஆகியோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com