மரக்காணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மரக்காணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்ப வத்தன்று இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
மரக்காணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

விழுப்புரம்:

மரக்காணம் அருகே செய்யாங்குப்பம் மாரி யம்மன் கோவில் தெரு, காட்டுக் கொள்ளை பகுதி யை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்க மாக வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மன உளைச்சலில் இருந்த பாலசுப்ரமணியன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com