டிராக்டர் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் சாவு

திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான நந்தகுமார்.
பலியான நந்தகுமார்.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் காளிய ம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆலத்தம்பாடி பகுதியில் இருந்து பருத்திச்சேரி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த டிராக்டர் நந்தகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com